சுவாமிக்கு அணிவித்த 2 பவுன் தாலி திருட்டு
சேலம்: சேலம், பூலாவரி, வாணியர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65. உத்தமசோழபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூசாரியாக உள்ளார்.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு கோவிலை திறந்து பூஜை செய்து கொண்டிருந்தார். அப்-போது ஒருவர், சுவாமி கும்பிட வந்தார். அவருக்கு தீபாராதனை காட்டிய பின், பின்புறம் உள்ள குழாயில் தண்ணீர் எடுக்க, பூசாரி சென்றார். பின் திரும்பி வந்தபோது, அந்த நபர் அம்மன் கருவ-றைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தது தெரிந்தது. சந்தேகம் அடைந்து அவரை வெளியே வந்து பார்த்தபோது, இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.பின் கருவறையில் சென்று பார்த்தபோது, அம்மனுக்கு அணிவித்-திருந்த தாலி இல்லாதது தெரிந்தது. இதுகுறித்து நேற்று சுப்பிர-மணி அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், அப்பகு-தியில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்-றனர்.
மேலும்
-
காமாட்சியம்பாள் கோயிலில் லலிதா சஹஸ்ரநாமம் நிறைவு
-
தொடர்கிறது வெடிகுண்டு மிரட்டல்
-
வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா துணை கமிஷனர்கள் குழு கண்காணிப்பு
-
கழிப்பறை கதவு உடைந்து தொங்குது; தண்ணீர் வருவதில்லை காந்திபுரம் துாய்மை பாரதம் கழிப்பறையில் பராமரிப்பு மோசம்
-
இன்று இனிதாக (21.05.2026) கோவை
-
சுவையான, தரமான உணவு தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு பயிற்சி தமிழக முதல்வர் உத்தரவு எதிரொலி