காமாட்சியம்பாள் கோயிலில் லலிதா சஹஸ்ரநாமம் நிறைவு

கோவை: கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயண யக்ஞம் ஆர்.எஸ்.புரம் ஸ்ரீகாமாட்சியம்பாள் கோயிலில் நேற்று நிறைவடைந்தது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது சங்கராச்சாரியர் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுகிரகத்தில், கோடி லலிதா சஹஸ்ரநாம யக்ஞம் கடந்த ஆக.,2025ல் துவங்கியது.

ஐந்து பேட்ச்களாக பிரித்து மொத்தம் 1,056 பக்தர்களோடு விமரிசையாக துவங்கியது. தொடர்ந்து மாதம் ஒரு நிகழ்ச்சி வீதம் ஏழு நிகழ்ச்சிகள் நடந்தன. 3,500 பக்தர்கள் இதில் பங்கேற்று இதுவரை, 93 லட்சம் பாராயணத்தை நிறைவு செய்தனர்.

நிறைவாக எட்டாம் கட்ட பாராயணம், ஸ்ரீ மஹா பெரியவரின் ஜென்ம தினமான நேற்று அகண்ட பாராயணமாக, ஸ்ரீ காமாட்சியம்பாள் கோயிலில் நடந்தது.

ஐந்து ஆவர்த்தி பாராயணத்துடன் நிறைவாக ஒரு ஆவர்த்தி திரிசதி பாராயணத்துடன் பூர்த்தியடைந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு, சுவாசினி தாம்பூலமும் அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியின் அனுக்கிரக பாஷணம் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. திரளான பக்தர்கள் கவனித்து கேட்டு அவரை தரிசித்தனர்.

Advertisement