குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி; விஜய் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: துாய்மையான அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, மோசமான அரசியல் செய்கின்றனர். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி செய்து, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கின்றனர் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டசபையில் இருக்கும் எங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பிரேமலதா, ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லார் நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில் தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கிறது.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க கூட்டணி கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்; ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி எம்எல்ஏக்களைத் தூக்குற சக்தியா? எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டளித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க.
அடுத்து, பிளவுபட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திமுக தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
முந்தய அரசு குழப்பிய குட்டையில் மீன் இருக்குமா என் தேடுகிறார் பாவம் .உங்களுக்கு நன்றாக தெரியும் எல்லா மீன்களும் நாடு கடத்தப்பட்டு விட்டன என்று
தேர்தலுக்கு முன்னாள் செல்வ பெரும் அடிமைய் வெச்சி காங்கிரஸ்சை உடைக்க பார்த்தீங்கள. unga அப்பாவும் நீங்களும் குழப்பாத குட்டையா
பியூஸ் போன பல்பு எல்லாம் வெளிச்சம் தராது .
நீங்கள் இதுவரை எத்தனை அ.தி.மு.க. எம்.எல். ஏக்களை உங்கள் கட்சிக்குள் இழுத்து அவர்களுக்கு பொன்னாடை போற்றி அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளீர்கள் அதெல்லாம் மறந்துவிட்டிர்களா மேலும் அவர்கள் உங்கள் கட்சிக்கு வந்தபின் செய்த அட்டூழியங்களுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் லஞ்சம் வாங்கியதற்கும் நீங்கள் முழு உடந்தையாக இருந்துவிட்டிடு அவர்களுக்கு உச்ச மன்றத்திலும் உறுதுணையாக வாதாடி தோற்றுப்போயிருக்கிரிகள் அவைகளெல்லாம் மறந்துவிட்டனவா
சரி உதய் சொல்ற அதே லாஜிக்கை 2021 தேர்தல் ரிசல்ட்டுக்கு பொருத்தி பாப்போம்.
2021-ல திமுக வாங்கின மொத்த ஓட்டு 1,74,30,179,
மொத்த பதிவான வாக்குகள் 4,58,86,784
அப்போ திமுகவை நிராகரித்தவர்கள் 2,84,56,605.
2 கோடியே 84 லட்சம் மக்கள் திமுகவுக்கு எதிரா ஓட்டு போட்ருக்கங்க. கிட்டத்தட்ட 62% வாக்களிக்காத அரசு தான் திமுகவும்.
கேக்கறவன் கேனையனா இருந்தா எதை வேணும்னாலும் சொல்லுவானுக ?
அதற்கெல்லாம் பதில் அளிக்காது .
புகைந்துகொண்டு இருக்கும் ஒரு ஓநாய் மற்றொன்றைப் பார்த்து அழுகின்றதோ? பதவி வெறியில் ரா கா போன்று இங்கு இடா பா. இதன் நடுவில் புகைந்து புழுங்கும் உதவாக்கரைகள். அல்லது மேல் இருக்கும் குறுக்கில் இருந்து வந்த "ஒரே இனத்துடன் அதே இனம் மோதக்கூடாது" என்று வந்த உத்தரவால் வெளி நடப்பு நாடகம்?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கலையை கற்றுக் கொடுத்ததே திமுகதான். கமிஷன், கரப்ஷன், கலைக்ஷன், ஓட்டுக்கு நோட்டு இவை எல்லாம் திமுக சீராட்டி பாராட்டி வளர்த்ததவையே. தனது ஐந்து வருட ஆட்சியில், ஐந்து லட்சம் கோடி கடனை வாங்கி அதை திட்டமில்லா செலவுகளுக்கு செலவிட்டதும் திமுகதான். இன்றைய தமிழகத்தின் சமூக சீரழிவுக்கு அடிப்படை காரணமே திமுகதான். தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் அடித்த கொள்ளைகளை வெளிக் கொணர முன்வர வேண்டும். அப்போதுதான் திமுக வின் இறுதி அத்தியாயம் மக்களால் எழுதப்படும்.
எந்த மாவட்டத்தில் திமுக அல்லது கூட்டணி கட்சிகள் தோற்கிறதோ அந்த மாசெ கட்சி பதவி பறிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின் அவர்களே .... உங்கள் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த நீங்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக தயாரா ?
இதை தட்டிக்கேக்க ஒரு மானஸ்தன் கூட இல்லையா அறிவாலையத்தில் ?
நீங்க மீன் பிடித்தது விஞ்ஞான முறையில். இவர் மீனை பிடிக்க குதிரையில் வருகிறார். ஆக மொத்தம் குதிரை பேரம் நடத்தாத யோக்கியன் இல்லவே இல்லை.மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி