இதுதான் தூய்மையா? தவறான பாதையில் தவெக: வருத்தம் அளிக்கிறது என்கிறார் இபிஎஸ்
சென்னை: இதுதான் தூய்மையா? தவறான பாதையில் இந்த அரசு செல்வது வருத்தமாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இபிஎஸ் கூறியதாவது: முதல்வர் தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்கிறார். தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொன்னால், எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நடக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து ஒரு சார்பினர் வீட்டிற்கு சென்று வருவது எந்த விதத்தில் நியாயம். இதுதான் தூய்மையா?
எல்லா கட்சிக்கும் சோதனை வரும். இது தவறான முன் உதாரணம். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் ஆட்சியில் இருந்து இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறது. ஆனால் எந்த தலைவரும் பிரிந்த இயக்கத்தினரை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்றது கிடையாது, ஆனால் ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
தவெகவை எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்று முழுமையான தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். குதிரை பேரம் நடந்து கொண்டு இருப்பதாக பேசப்படுகிறது. உண்மையில் தூய்மையான ஆட்சி நடத்துவோம் என்று சொல்லிவிட்டு இதற்கு எல்லாம் இடம் அளிக்கிறார்கள் என்று பார்க்கும் போது மக்கள் தான் இதற்கு நல்ல முடிவை கட்ட வேண்டும். இன்றைக்கு தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்ததால் 107 இடங்கள் தான். ஒருவர் பங்கேற்க நீதிமன்ற தடை விதித்துள்ளது.
தவெகவின் இடம் 106 தான்; இன்றைக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று, தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் தான் அந்த 118 இடங்களுக்கு மேல் கிடைத்து ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன நடை முறைகளை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் பின்பற்றவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. தமிழகத்தில் இன்றைக்கு அவர்கள் 34 சதவீத ஓட்டுக்கள் தான் பெற்று இருக்கிறார்கள். 66 சதவீதம் பேர் இன்னும் தமிழக வெற்றிக்கழத்தின் மீது வெறுப்பாக தான் இருக்கிறார்கள்.
அதிமுக கூட்டணி 1 கோடியே 34 லட்சம் ஓட்டுக்கள் பெற்று இருக்கிறது. அதிமுக வலிமையான இயக்கம். அதிமுக கூட்டணி கட்சியினரை தவிர திமுகவுடன் 100க்கு 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைக் கூறி தவெக பேரம் நடத்தி உள்ளது. 6 அமைச்சர், வாரிய தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
இபிஎஸ் மீது குற்றச்சாட்டு
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், ''மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியான மாலை திமுகவில் இருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டனர். நல்ல பதவிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
எனக்குப்புரியவில்லை. பின்னர் தான், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க இபிஎஸ் முயற்சி எடுத்தது தெரியவந்தது. அடுத்த 2 நாட்களில் திருமாவளவனை முதல்வராக்கவும், அதிமுகவில் மற்ற அமைச்சர் பதவிகளை வைத்துக் கொள்ளவும் இன்னொரு முயற்சி நடந்தது. இதை ஏற்க இபிஎஸ் மறுத்து விட்டார். நான் தான் முதல்வராக இருப்பேன் என்று கூறி அதை தடுத்து விட்டார்,'' என்றார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தவறான பாதையில் விஜய்; இபிஎஸ் பரபரப்பு பேட்டி
முழு பேட்டியை காண இங்கே கிளிக் செய்யவும்
இந்த நபர் சற்றும் முதிச்சியற்றவர் . சுய லாபத்துக்கு கட்சியை காவு கொடுத்து கொண்டிருக்கிறார்
கட்சி தன் கையில் இருக்குதுன்னு அகங்காரத்தில் BJPயை எப்படி உதாசீனப்படுத்தின.இப்ப பத்துடன் பதினொன்னா இருந்து புலம்ப வேண்டியது தான்.
ஒரு முறை தோற்றாலே தலைவர் பதவியை துறக்கும் பிரிட்டிஷ் ஜனநாயக முறையை இங்குள்ள டுபாக்கூர் ஜனநாயகவாதிகளான ராகுல், ஸ்டாலின், ஈபிஎஸ் போன்றோர் பின்பற்ற வேண்டும்.
முதல்வர் ஆன பிறகு தனக்கு ஆதரவு தெரிவித்த , தெரிவிக்காத ,தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றி பெறாத, தேர்தலில் போட்டியிடாத போன்ற அனைத்து கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்குள் இரண்டு நாட்கள் முடிந்து நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நாள் வந்துவிட்டது. நிச்சயமாக இன்னும் ஒரு நாள் இடையில் இருந்திருந்தால் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் முதல்வர் விஜய் உங்களையும் வந்து சந்தித்திருப்பார். ஆகவே ஒரு சார்பினர் வீட்டிற்கு சென்று வருவது எந்த வகையில் நியாயம் என்று கேட்பதில் அர்த்தம் இல்லை.
வேலூர் இப்ராஹிம் போகும் இடம் எல்லாம் எத்தனை தொல்லை கொடுத்தீர்கள். பொன் மாணிக்க வேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்களா. தி மு க அளவு மோசம் இல்லை. ஆனால் நீங்களும் வினை விதைத்தீர்கள் தானே?
பெட்டி, பதவி தான் திராவிட அரசியலின் மைய புள்ளி. கொள்கையாவது பருப்பாவது. 5 வருடம் பதவி இல்லாததால் குதிரைகள் எல்லாம் பதவி, பண தாகத்தில் பாலைவன சோலையை நோக்கி ஓடி போயி உள்ளது. திராவிட கட்சிகள் ஆரம்பம் 1930 கள் முதல், சொத்து மற்றும் பணத்திற்காகவே பிரிந்து உள்ளன. மக்களை ஏமாற்ற கொள்கை என்று அவ்வப்போது டாஸ்மாக் மக்களை குஷி படுத்துவார்கள்.
இது உங்கள் கர்மா எடப்பாடியாரே. கட்சிக்காக காலாகாலமாக உழைத்த செங்கோட்டையன் பன்னீர் செல்வம் வைத்தியலிங்கம் போன்றோரை ஒதுக்கினீர்கள். வேலுமணி ஷண்முகம் உங்களை ஒதுக்குகிறார்கள். அவர்கள் ஒன்றும் புனிதரல்ல. பதவி ஆசையில் பிரிந்து விட்டனர்.
நடைமுறை என்ன சூழ்நிலை எப்படி உள்ளது மக்கள் மனநிலை என்ன. இதன் காரணமாக கட்சியின் எதிர்காலத்துக்காக முடிவு எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு.
இவர் நல்லவராக வே இருந்தாலும் சுயநலவாதி ஒரு வட்டத்துக்குள்ளேயே யோசிப்பவர் மிக பெரிய இயக்கத்தை வழி நடத்தும் ஆற்றலோ ராஜ தந்திரங்களோ இவரிடம் இல்லை மிக முக்கியமாக ஆலோசனைகளை மதிக்க தெரியாதவர் அதிமுக கை மாறினால் மட்டுமே பிழைக்கும்
எடப்பாடியார் தலைமையில் அதிமுக தோற்றதற்கு அவரே பொறுப்பு என்றால் தேர்தலி்ல் படுதோல்வி அடைந்த தீமுக தலைவராக உள்ள ஸ்டாலினை என்ன செய்வீங்க
படு தோல்வி அடைந்த பிஜேபி தலைமையை என்ன சொல்லுவீங்க
ஆம், நைனார் ராஜினாமா செய்ய வேண்டும்