திருப்புத்துாரில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு; கட்டுப்படுத்த முடியாமல் பெண்கள் தவிப்பு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அதிகரித்து வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பண்டங்களை எடுத்துச் சென்று விடுவதால் பெண்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்புத்துாரில் சில ஆண்டுகளுக்கு முன் கீழ ரதவீதி பகுதியில் உள்ள அலைபேசி உயர் கோபுரத்தில் சில குரங்குகள் வசிக்கத் துவங்கின. சில மாதங்களில் உயர்கோபுரம் முழுவதும் ஏராளமான குரங்குகள் பெருகின. அதற்கான வசிப்பிடம் இல்லாமல் அருகிலுள்ள அகிழ்மனைத் தெரு, இடையர் தெருக்களுக்கு செல்லத் துவங்கின. அங்கு வீடுகளுக்குள் புகுந்து பெரும் இடையூறை ஏற்படுத்தின. சமையல் அறைக்குள் நுழைந்து தேங்காய்,உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லத் துவங்கின. பொதுமக்கள் குரங்குகளை நகரிலிருந்து வெளியேற்ற கோரினர். ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தற்போது நகரின் பல தெருக்களிலும் குரங்குகள் கூட்டம்,கூட்டமாக உலா வருகின்றன. அதற்கு நகரில் பரவலாக கட்டப்பட்டுள்ள கேபிள் டிவிக்கான கேபிள்கள் உதவுகின்றன. கேபிளை பிடித்துக் கொண்டு ‛ சர்க்கஸ் பார் வீரர்கள்' போல் ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் உயரத்தில் கடந்து செல்கின்றன. இதனால் கேபிள் வயர்கள் கீழே விழுந்து ‛டிவி' பார்க்க முடியாமல் குடியிருப்புவாசிகள் தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பலரின் வீடு, தோட்டங்களில் உள்ள மரங்களில் சிறு பிஞ்சு காய்களை பறித்து எரிகின்றன. குரங்கு தொந்தரவு தாங்க முடியாமல் பலரும் வீடு தோட்டங்களை அழித்து வருகின்றனர்.
தற்போது வீடுகளில் நுழைந்து சமைத்த உணவுப் பொருட்களை எடுத்து கொட்டி விடுவது அதிகரித்து வருகிறது.உணவு பொருட்கள் வீணாகி பெண்கள் தவிக்கின்றனர். அடித்து விரட்டவும் முடியாமல் பொதுமக்கள் உள்ளனர். வீடுகளில் மரங்கள் வளர்ப்பு முற்றிலுமாக குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்கவும், வீடுகளில் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் குரங்குகளை நகரிலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியமாகும். நிரந்தரமாக குரங்குகளை விரட்ட பேரூராட்சி மற்றும் வனத்துறை நிர்வாகத்தினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
-
கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு
-
தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
-
ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
-
கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்