செய்யூர் பஜார் பகுதியில் கழிப்பறை வசதி
செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் 6 லட்சம் ரூபாயில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள் , மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் தேவராஜபுரம், சால்ட் காலனி, பாளையர் மடம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்கு செல்ல செய்யூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செய்யூர் பஜார் பகுதியில், கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5.92 லட்சம் ரூபாயில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி