தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

உடுமலை: உடுமலையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்கள் நேற்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், கடந்த 8 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை செண்பகவல்லி மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர்.

Advertisement