விஷ்ணுபதி புண்ணிய காலம் பெருமாள் கோயில்களில் பூஜை 

கோவை: விஷ்ணுபதி புண்ணிய கால வைபவம் மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்யும் அனைத்து கோயில்களிலும் நடந்தது.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி பக்தர்கள் அதிகாலை எழுந்து குளித்து, பெருமாள் கோவிலுக்கு சென்றனர். வீடுகளிலுள்ள பூஜை அறையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். துளசி கொண்டு அர்ச்சனை செய்தனர். 

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மேற்கொள்ளும் தர்ம தானங்கள், மந்திர ஜெபங்கள் பல்லாயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது இறைநம்பிக்கை. அதனால் திரளான பக்தர்கள் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மஹாவிஷ்ணுவை வழிபட்டனர். 

ராம்நகர் கோதண்டராமர் , பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபாலசுவாமி, பாப்பநாயக்கன்புதுார் கோதண்டராமர் , இடையர்வீதி கல்யாணவெங்கட்ரமணசுவாமி, சென்னனுார் ஸ்ரீராதாகிருஷ்ணர் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Advertisement