ஐ.எஸ்.ஐ., இல்லாத ஹெல்மெட் பறிமுதல்
கோவை: கோவையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத ஹெல்மெட்களை, பி.ஐ.எஸ்., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்.,) கோவை கிளை விஞ்ஞானிகள் வினித் குமார், திவ்யா, கவுதம் சந்த் சோனி ஆகியோர் அடங்கிய குழு, சாய்பாபா காலனியில் உள்ள ஐ.பி., ஆட்டோ வேர்ல்டு என்ற இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத தரமற்ற ஹெல்மெட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ., முத்திரை பதிக்காத ஹெல்மெட்களை பறிமுதல் செய்தனர்.
கடை நிர்வாகத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நுகர்வோர், ஐ.எஸ்.ஐ.,முத்திரையுள்ள தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என, பி.ஐ.எஸ்., கோவை கிளை தலைவர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பர்கூர் பஸ் ஸ்டாண்ட் டேங்க்கில் குடிநீர் இல்லாமல் பயணியர் தவிப்பு
-
தனியார் பள்ளி பஸ்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
-
நகராட்சி கட்டண கழிப்பிட நுழைவில் கேமராக்கள் இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்கள் அச்சம்
-
ஆமையாக ஊர்ந்த வாகனங்கள்; சுற்றுலா பயணியர் அவதி
-
பஸ் ஸ்டாண்டில் மயங்கிய விவசாயி பலி
-
கோடை கால உழவு: விவசாயிகளுக்கு அறிவுரை
Advertisement
Advertisement