கோடை கால உழவு: விவசாயிகளுக்கு அறிவுரை

பனமரத்துப்பட்டி: கோடை காலத்தில் உழவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை: மழை காலங்களில் போதிய ஈரம் இருக்கும். அதில் உழவு செய்யும் போது, மண்ணுக்குள் குளுமையான தன்மை உரு-வாகும். கோடை காலத்தில் உழவு செய்யும்போது வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்கு கிடைக்கும். நிலத்தின் மேட்டு பகுதியில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும்.
கோடையில் இரு மழை கிடைக்கும். முதல் மழையில் உழவு செய்ய வேண்டும். 2வது மழைநீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும். கோடை உழவு பயிர்களின் வேர் செல்லும் ஆழத்தில் ஈரம் காக்கப்படும். கோடை உழவுக்கு அடுத்து, சாகுபடி செய்யும் பயிர்களுக்கு தேவையான சத்துகளையும், ஈரப்
பதத்தையும் நிலைநிறுத்த முடியும்.
கோடை உழவு செய்யும் காலகட்டங்களில் இரவில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகும். காற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துகள், பூமியை நோக்கி இறங்கும். அந்த சத்துகளை மண் உள்வாங்கிக்கொள்ளும். காற்றில் உள்ள சத்துகளை மண்ணில் நிலை நிறுத்துவதுதான் கோடை உழவின் நன்மை.

Advertisement