இதே நாளில் அன்று
மே 17: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோட்டத்துாரில் நடிகர் சீனிவாசராவ் - பெத்த நரசம்மா தம்பதியின் மகளாக, 1920ல் இதே நாளில் பிறந்தவர் பி.சாந்தகுமாரி.
கடப்பாவில் பள்ளி படிப்பையும், தன் தாயாரிடம் கர்நாடக இசையையும் கற்ற இவர், உயர் கல்வி மற்றும் இசை கற்க சென்னை வந்தார். பிரபல பாடகர் சாம்பமூர்த்தியிடம் சங்கீதம், வயலின் வாசிப்பை கற்றார். இவர், தன் 15 வயதிலேயே தென்மாநிலங்களில் பல கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஒரு கச்சேரியில் இவர் பாடியதை கேட்ட திரைப்பட இயக்குநர் பி.வி.தாஸ், மாயா பஜார் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அடுத்து, பி.புல்லையா இயக்கிய சாரங்கதாரா படத்தில் நடித்தார். அவரையே காதலித்து மணந்தார்.
தொடர்ந்து, பக்த ஜனா, அம்மா, மனம் போல் மாங்கல்யம், நெஞ்சில் ஓர் ஆலயம், சிவந்த மண், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்தவர், 'பத்மஸ்ரீ பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, பல படங்களை தயாரித்தார்.
பக்தி பாடல்களை எழுதி, இசையமைத்து, பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோரை பாட வைத்த இவர், தன் 85வது வயதில், 2006, ஜனவரி 16ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி