வடகிழக்கு அணி கலக்கல் * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-0 என முகமதன் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி, முகமதன் அணியை எதிர்கொண்டது.
சொந்த மண்ணில் களமிறங்கிய உற்சாகத்தில் வடகிழக்கு யுனைடெட் அணிக்கு 19 வது நிமிடத்தில் ஜெய்ரோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மீண்டும் அசத்தியது வடகிழக்கு யுனைடெட் அணி. தோய் சிங்கிடம் இருந்து பந்தை பெற்ற தினேஷ், அதே வேகத்தில் கோல் அடித்து கைகொடுத்தார்.
முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை முடிந்த போட்டிகள் முடிவில் ஈஸ்ட் பெங்கால் (23), மோகன் பகான் (23), பெங்களூரு (23) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன. வடகிழக்கு யுனைடெட் (16) 9வது, முகமதன் (3) கடைசி (14) இடத்தில் உள்ளன.
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி