மாநிலங்களுக்கு ரூ.90,000 கோடி கடன்: வட்டியின்றி வழங்குகிறது மத்திய அரசு
புதுடில்லி: மத்திய அரசு, 90,000 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்க உள்ளது. இந்நிதி, மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: மூலதன செலவு கடன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகையை மாநிலங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், 45 சதவீத தொகை, முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஆதாரமான ரயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின் திட்டங்களை செயல்படுத்த இவை பயன்படுத்தப்படும்.
மேற்காசிய போர்ச்சூழலில், உள்நாட்டில் நீடித்த பொருளாதார இயக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா காலத்தில் 'மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. பின் அது விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 2020 - 21ல் 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அரசு திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிப்பது, சீர்திருத்தங்கள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் 2024 - 25, 2025 - 26 நிதியாண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இத்திட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, 2025 - 26 ஒதுக்கீட்டில் நாடு முழுதும் 9,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இத்திட்டத்தின் நிதியை மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்தி ன. தற்போது அடுத்த கட்ட நிதி வழங்கப்பட உள்ளது. இதன் பெரும்பகுதி, அதாவது 66 சதவீதம் கட்டுப்பாடற்ற செலவின ஒதுக்கீடாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
@block_B@ நிதி நிலவரம்:
* 2025 - 26ன் ஏப்.,- - ஆக., காலகட்டத்தில் மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கப்பட்டது
* நடப்பு நிதியாண்டில் மத்திய அரசால் ஏற்கனவே கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
* ஜூன் இறுதிக்குள் மேலும் 70,000 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.block_B
பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களுக்கும் வட்டியில்லா கடன் உதவி மத்திய அரசு வழங்குமா?
சென்ற முறை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு அளித்த 5000 கோடி வட்டியில்லாக் கடனை ஸ்டாலின் அரசு வாங்க மறுத்தது. எங்கும் எதிலும் அரசியல் ஆதாயம் பார்த்தால்?
சென்ற முறை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு அளித்த 5000 கோடி வட்டியில்லாக் கடனை ஸ்டாலின் அரசு வாங்க மறுத்தது. எங்கும் எதிலும் அரசியல் ஆதாயம் பார்த்தால்?
எல்லாம் மாநிலங்களிடமிருந்து மத்திய பாஜக அரசு வரிவசூல் என்ற பெயரில் ஆட்டையைப் போட்ட பணம் தான் திரும்பி வருகிறது!
வரின்னா ஆட்டையை போட்ட பணமா? அப்போ, மாநில அரசுகள் வைத்திருக்கும் நிதி மக்களிடம் ஆட்டைய போட்டது, சரிதானே
உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் வளர இந்த கடன் தரலாம். முழுவதும் அந்நிய முதலீடுகள் எதிர்கொள்கிறோம். தமிழக PSG group, TVS group, Ramco group... போன்ற பல உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் வளர உதவலாம்? மாநிலம் மத்திய நிதியை ஓட்டு வாங்க தான் செலவிடும். நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தரும். அதிக வரி செலுத்தும்.
It should be spent for capital expenses without any cut, commission, et.al. To spend the money without cut, commission, et.al. voters should stop selling their votes
பணம் கடன் கொடுப்பது உரிய திட்டங்களுக்குத்தான் செலவழிக்கப் படுகிறதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். தமிழகம் போன்ற மாநிலங்களில் இலவசங்களுக்கு அள்ளி வாரி செலவு செய்யாமல் இருக்க தொடர் கண்காணிப்பு அவசியம்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு அதிக அளவிலும் பிற மாநிலங்களுக்கு கொஞ்சமாகவும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு கொஞ்சூண்டும் நிதி இந்த 90000 கோடியில் ஒதுக்கப்படும். வழக்கம்போல தம்பட்டம் பெரிதாக ஒலிக்கும்.
பணம் கடன் வாங்கினால் கணக்கு தணிக்கை நடைபெறும். தேவை இல்லைன்னா பணம் கடன் வாங்க வேண்டாம். அப்பாவி வீட்டில் கணக்கு காண்பிக்க மாட்டார் போலும்.
"வட்டி இல்லாத கடன் என்பது மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இந்த நிதியைத் தேவையில்லாத ஆடம்பரத் திட்டங்களுக்கு வீணடிக்கக் கூடாது. 50 ஆண்டுகள் வட்டி இல்லை என்பதால் கடனை அள்ளிப் போட்டுக்கொண்டு, எதிர்காலத் தலைமுறையைக் கடன் சுமையில் தள்ளாமல், உருப்படியான மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்."மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி