'பார்' உரிமையாளர்களுக்கு போலீஸ் அறிவுரை

காரமடை: ஒரே நபருக்கு 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை, விற்பனை செய்யக்கூடாது என காரமடை போலீசார் பார் உரிமையாளர்களுக்கு அறுவுரை கூறினர்.

காரமடை போலீஸ் ஸ்டேஷனில், மனமகிழ் மன்றம் என சொல்லக்கூடிய 11 டூ 11 பார் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன், எஸ்.ஐ., ராஜேஸ் குமார் உள்ளிட்டோர் பார் உரிமையாளர்களுக்கு அறுவுரை வழங்கினர். அப்போது, ஒரே நபருக்கு 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பார் செயல்படக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.---

Advertisement