கிரைம் கார்னர் திருவள்ளூர்

வீட்டின் கதவை உடைத்து புடவைகள் திருட்டு





திருத்தணி: திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 55. இவர் கடந்த, 15ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது குடும்பத்துடன் விடுமுறை கழிக்க, கொடைக்கானலுக்கு சென்றார்.

நேற்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்திருப்பது தெரிந்தது.

பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டு பட்டுப்புடவை உட்பட, 6 புடவைகள், இரண்டு பித்தளை அண்டாக்கள் திருடு போயுள்ளன. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி கோவிலில் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு





திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மலர்விழி, 71. இவர் நேற்று காலையில், உறவினர் அனுதேவியுடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.

மலைக்கோவில் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்து தேர்வீதிக்கு நடந்து சென்ற போது, திடீரென மலர்விழி மயங்கினார். அங்கிருந்த பக்தர்கள் அவரை மலைக்கோவிலில் உள்ள மருத்துவ உதவி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



மயங்கி விழுந்த மூதாட்டி பலி





திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 67. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரது உறவினர்கள் அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement