அப்போலோ சிறப்பு நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர் ப்ரீத்தி மிர்னாலினி நேற்று புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கினார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் ப்ரீத்தி மிர்னாலினி, நேற்று புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி. மகால் எதிரே உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

அதில், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், பைல்ஸ், பேரியாட்ரிக், எடை குறைப்பு, அறுவை சிகிச்சை, அப்பெண்டிக்ஸ், மார்பக கட்டிகள், மூல நோய், ஆசனவாய்ப் பிளவு, புரையோட்டம் ஆகியவற்றிற்கான லேசர் அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement