தொண்டியில் மே 22ல் 2300 படகுகள் ஆய்வு

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) தேவிபட்டினம் ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை 2300 நாட்டுபடகுகள், 79 விசைபடகுகள் மே 22 ல் ஆய்வு செய்யபடவுள்ளன.

இது குறித்து மீன்வளத்துறையினர் கூறியதாவது- தொண்டி கடலோர பகுதியில் 2300 நாட்டுபடகுகள் மே 22 ல் ஆய்வு செய்யபடவுள்ளன. படகுகளின் உரிமம் தகுதி மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து குழுவினர் சரிபார்க்க உள்ளனர். 79 விசைபடகுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளன.

மீனவர்கள் தங்களது படகுகளின் ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் மீன்பிடி அட்டைகளை ஆய்வின் போது தயாராக வைத்திருக்க வேண்டும். தகுதியில்லாத படகுகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றனர்.

Advertisement