பைபாஸ் ரோட்டில் செல்லும் பஸ்களால் மக்கள் அவதி: கண்காணிக்க ஊழியர்க் இல்லாத அவலம்
திருப்புவனம்:திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட நகரங்களை புறக்கணிக்கும் பஸ்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு,தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு முன்பு வரை அனைத்து பஸ்களும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்றி சென்றன.
பைபாஸ் ரோடு அமைக்கப்பட்ட பின் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுத்து வருகின்றன. இரவு நேரங்களில் மதுரை, மானாமதுரை பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.
நகருக்குள் அனுமதிக்கப்பட்ட பஸ்கள் வராவிட்டால் கண்காணித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புத்துார், சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட தாலுகாக்களில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஏற்ற மறுப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து திருப்பாச்சேத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் ஆய்வு செய்தார்.
மதுரைக்கு பஸ் வசதி திருப்புத்துார்: திருப்புத்துார் போக்குவரத்து மையமாக உள்ளதால் பஸ் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
குறிப்பாக மதுரை -தஞ்சாவூர், மதுரை - -தேவகோட்டை, மதுரை- - காரைக்குடி என்று பல ஊர்களிலிருந்து திருப்புத்துார் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் அதிகமாக உள்ளன.
இருப்பினும் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும் திருப்புத்துார் மற்றும் சுற்றுப்புறக்கிராமத்தினருக்கு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இருக்கை வசதி கிடைப்பதில்லை. குறிப்பாக விடுமுறை தினங்கள், முகூர்த்த நாட்களில் உட்கார இடம் கிடைக்காமல் நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தற்போது கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகள் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர். மதுரை எம்.ஜி.ஆர் பஸ் ஸ்டாண்டில் திருப்புத்துார் பயணிகள் பஸ்சில் முதலில் ஏறி அமர தனியார், அரசு பஸ் பணியாளர்கள் அனுமதிக்காததால் திருப்புத்துார் பயணிகளுக்கு உட்கார 'சீட்' கிடைப்பது இல்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் நள்ளிரவில் வந்த தனியார் பஸ்சில் சிறுவர்,சிறுமியருக்கு முழு டிக்கெட் வசூலித்து போக்குவரத்து விதி மீறல் நடந்தது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியே பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
மேலும், நிரந்தர நடவடிக்கையாக திருப்புத்துாரிலிருந்து மேலுார் வழியாக மதுரை செல்ல நேரடி பஸ் வசதியை துவக்க அரசுப் போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்புத்துார் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு