அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இருவர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக, சென்னை செல்லும் அரசு பேருந்தில், போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, இரண்டு இளைஞர்களின் உடைமைகளில், 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராகுல், 26, ரவி மகன் ராகுல், 29, என தெரியவந்தது. ஒடிஷா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ததும் தெரிந்தது.

திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement