மீஞ்சூர் உணவகங்களில் காஸ் சிலிண்டர் பறிமுதல்
மீஞ்சூர்: மீஞ்சூர் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை, வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் உணவகங்களில், வணிக காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் பயன்படுத்தப்படுவதாக, பொன்னேரி வட்ட வழங்கல் துறையினருக்கு புகார் வந்தது. நேற்று, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையில், அத்துறையினர் மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தினர்.
அதில், நான்கு உணவகங்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பின், உணவக உரிமையாளர்களிடம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். வீட்டு உபயோகத்திற்கானதை பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காஸ் சிலிண்டர்கள், ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு