அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்வு
திருப்பூர், மே 22–
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின் முந்தைய ஆண்டை விட, 2.82 சதவீத தேர்ச்சியை அரசு பள்ளிகள் உயர்த்தி காட்டியுள்ளன. அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் இந்த பங்களிப்பால், தேர்ச்சி சதவீதம், 17வது இடத்தில் இருந்து பத்தாவது இடத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 148 அரசு பள்ளிகளில், 2025ம் ஆண்டு, 12 ஆயிரத்து, 550 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இவர்களில், 11 ஆயிரத்து, 510 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம், 91.71.
நடப்பாண்டில், 148 அரசு பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து, 13 பேர் தேர்வெழுதினர். 11 ஆயிரத்து, 356 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம், 94.53. இது கடந்தாண்டை காட்டிலம், 2.82 சதவீதம் அதிகம். கடந்தாண்டு அரசு பள்ளியில், 1,040 பேர் தேர்ச்சி பெறாத நிலையில், நடப்பாண்டு இது, 657 ஆக குறைந்துள்ளதாக, கல்வித்துறையினர் கூறினர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு