அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
திருப்பூர், மே 22–
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மொழித்தாள் உட்ட அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த முறை தமிழில் 320 பேர் தேர்ச்சி பெறவில்லை. இம்முறை இது, 177 ஆக குறைந்துள்ளது. ஆங்கிலத்தில், 55 பேர் தேர்ச்சி பெறவில்லை. இம்முறை இது, 47 ஆக குறைந்துள்ளது. கணிதத்தில் இம்முறை, 480 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதே நேரம் கடந்த முறை, 750 பேர் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். அறிவியலில் 2025ல், 631 பேர் தேர்ச்சி பெறாத நிலையில், இம்முறை, 432 பேர் தேர்ச்சியடையவில்லை. சமூக அறிவியலில், 549 பேர் கடந்த முறை தேர்ச்சி பெறவில்லை. இம்முறை இது, 450 ஆக குறைந்துள்ளது.
பாட வாரிய தேர்ச்சியில் மாணவரை விட மாணவியர் அசத்தியுள்ளனர். கடந்த முறை தமிழில், 238 பேர், ஆங்கிலத்தில், 39, கணிதத்தில், 443, அறிவியலில், 404, சமூக அறிவியலில், 375 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இம்முறை, தமிழில், 143, ஆங்கிலத்தில், 40, கணிதத்தில், 303, அறிவியலில், 314, சமூக அறிவியலில், 288 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
மாணவியரில், 82 தமிழிலும், 16 பேர் ஆங்கிலத்திலும், 307 பேர் கணிதத்திலும், 227 பேர் அறிவியலிலும், 174 பேர் சமூக அறிவியலிலும் தேர்ச்சி அடையவில்லை. இம்முறை, தமிழில், 34, கணிதத்தில், 177, அறிவியல், 118, சமூக அறிவியல், 162 பேரும் தேர்ச்சி அடையவில்லை. ஆங்கிலத்தில் கடந்த முறை, 16 மாணவியர் தேர்ச்சி பெறவில்லை; இம்முறை, ஏழு மாணவியர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.
வழக்கமாக ஒரு பாடத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்றால், எந்த பாடம், எந்த பள்ளி என்பது குறித்து மாவட்ட கல்வித்துறை ஆய்வு செய்யும். சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கு தனி விளக்க கூட்டம் நடத்தி காரணம் கேட்கப்படும். திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்த வரை மொழித்தாள் உட்பட முக்கிய பாடங்களிலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள் ‘அப்பாடா’ என நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு