10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீநடேசன் பள்ளி சாதனை
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தாம்பரத்தில் இயங்கும், ஸ்ரீநடேசன் பள்ளி மாணவ -– மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், ஸ்ரீநடேசன் வித்தியாசாலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ – மாணவியர், 244 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத் தேர்வில், ஆங்கிலத்தில் 6 பேர்; கணிதத்தில் 3 பேர்; அறிவியலில் 8 பேர்; சமூக அறிவியலில் 12 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
மாணவர் மெல்கிப்சன், 496 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவியர் யுவஸ்ரீ, 493; வி.டன்ஷிகா, 488 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ – மாணவியருக்கு, பள்ளி தாளாளரும், தலைமை முதல்வருமான டாக்டர் காயத்ரி ராமச்சந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், 100க்கும் மேலான மாணவ – மாணவியர், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதித்துள்ளனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு