‘டிவி ரிமோட்’ தராததால் 12 வயது சிறுவன் தற்கொலை
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தச்சம்பாறை, முத்துகுருசி பகவதிபரம்பு பகுதியை சேர்ந்த பிரமோத் என்பவரின் மகன் பிரதோஷ், 12. இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘ரிமோட்’டைப் பயன்படுத்துவது தொடர்பாக சிறுவனுக்கும், சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சகோதரன் ரிமோட்டைத் தர மறுத்ததால் மனமுடைந்த பிரதோஷ், வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் சிறுவன் கீழே வராததால், தேடிச் சென்ற குடும்பத்தினர், அங்குள்ள விட்டத்தில் தூக்கிட்டு சிறுவன் தற்கொலைக்கு முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு தச்சம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததார். இச்சம்பவம் குறித்து மண்ணார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
-
த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை