தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு தாமலில் நடை மேம்பால பணி தீவிரம்
காஞ்சிபுரம், மே 22–
தேசிய நெடுஞ்சாலை கடப்பதற்கு, சாலை குறுக்கே நடை மேம்பாலம் அமைக்கும் பணியில், அத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை – பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன.
சென்னை – மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் மற்றும் காஞ்சிபுரம – காரப்பேட்டை முதல் ரணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இருப்பினும், தாமல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை கடப்பதில், பொது மக்கள் மற்றும் சாலையை கடப்போர் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
இதை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, நடை மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடை மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதன் மூலமாக, தேசிய நெடுஞ்சாலையை கடப்போர் விபத்தில் சிக்குவதை தவிர்க்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு