நண்பருக்கு கத்திக்கத்து போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மது போதையில் நண்பரை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அருண்பாண்டியன், 19; இவர், கடந்த 13ம் தேதி இரவு மதுபோதையில், அங்குள்ள மாரியம்மன் கோவில் எதிரே நின்றுகொண்டு, ஆபாசமாக பேசினார்.

இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான நாகராஜ் மகன் பாலச்சந்தர், 24; தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் கையில் வைத்திருந்த சிறிய பேனா கத்தியால் பாலச்சந்தரை குத்தி தாக்கினார்.

புகாரின் பேரில், அருண்பாண்டியன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement