வயநாட்டை ராகுல், பிரியங்கா மறந்துவிட்டனர்: காங்., அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியை ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் மறந்துவிட்டனர் எனக்கூறி போஸ்டர் ஒட்டியவர் மீது கேரளாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் உபியின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் ராகுல் வெற்றி பெற்றார். பிறகு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, நடந்த இடைத்தேர்தலில், அவரது சகோதரி பிரியங்கா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்கு பிறகு, அக்கட்சியின் மூத்த தலைவர் வி.டி. சதீஷன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் பதவியேற்க உள்ளார். முதல்வர் பதவியை அடைய ராகுலுக்கு நெருக்கமானவரான கே.சி. வேணுகோபால் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், வயநாட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வயநாடு தொகுதியை ராகுல் மற்றும் பிரியங்கா மறந்துவிட்டனர் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் போஸ்டர்களில் கூறப்பட்டு உள்ளதாவது: கேசி வேணுகோபால் உங்களின் பையை தூக்குபவராக இருக்கலாம் ராகுல். ஆனால், கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில், இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால், அமேதி அளித்த முடிவுகளையே வயநாடும் அளிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், வயநாடு தொகுதியை ராகுலும், பிரியங்காவும் மறந்துவிட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நபர் ஒருவர் போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (7)
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
17 மே,2026 - 22:38 Report Abuse
பாஸ் அவங்க வாழ வைத்த விடியலையும் மறந்து விட்டனர், அது மட்டும் இல்ல 23 கட்சி கூட்டணியை உடைச்சி விடியலை தனி மரம் ஆக்கிட்டாங்க 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
17 மே,2026 - 14:34 Report Abuse
கேரளாவில் 22 உறுப்பினர்கள் முஸ்லீம் லீக் அவர்களுடன் கூட்டு. கேரளாவின் பல பகுதிகள் ஷரீஅத் சட்டப்படி நடக்கிறது. ஆனால் கான்-cross செகுலர் அரசியல் நடத்துவதாக சொல்கிறார்கள்.
அஸ்ஸாமில் இவர்கள் கட்சியில் 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்களாதேஷிகள். ஒரு உறுப்பினர் மட்டுமே ஹிந்து. ஆனால் அங்கேயும் கான்-cross செகுலர். ஆனால் மற்ற கட்சிகள் செய்தால் மதவாதம். 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
17 மே,2026 - 13:40 Report Abuse
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு இல்லாமல் இந்தக் காங்கிரஸ் கேரளாவில் வெல்ல முடியாது.ஒரு முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதற்கு கூட்டணி நிர்பந்தம் என்ன என்பது இப்போது நன்கு அறிய முடிந்தது. 0
0
Reply
Nandakumar Naidu - ,
17 மே,2026 - 13:28 Report Abuse
congress அதன் கூட்டணி கட்சிகள் நிரந்தரமாக,முற்றிலும் மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிந்து போக வேண்டும். பாரதம் நிம்மதியாக இருக்கும். 0
0
MUTHU - Sivakasi,இந்தியா
17 மே,2026 - 17:23Report Abuse
இன்றைய காங்கிரஸுக்கும் பழைய காங்கிரஸுக்கும் தொடர்பு மைசூருக்கும் மைசூர்பா-வுக்கும் தொடர்பு என்ற உண்மை சராசரி மக்களுக்கு தெரிவதில்லை. அதற்கு காரணம் பொதுவாக பள்ளி பாடத்திட்டத்தில் இந்தியா சுதந்திரபோராட்ட வரலாறு சொல்லும்பொழுது காங்கிரஸ் என்ற வார்த்தை மாணவர்களிடம் நன்றாக பதிக்கப்பட்டு மூளை கழுவப்பட்டு அனுப்பப்படுகின்றது. அவர்கள் நல்லவர்கள் என்ற எண்ணம் பரவலாய் மாணவர்கள் மனதில் உண்டாகி உள்ளது. இதுவே மக்களிடம் காங்கிரஸ் என்ற வார்த்தை மீது ஒரு softcorner உண்டாக்கி விடுகின்றது. 0
0
Reply
பப்பு யாதவும், கான் க்ராஸ், அக்பர் சாலை, டெல்லி - ,
17 மே,2026 - 13:24 Report Abuse
கைப் பை அக்கா அடுத்த நாடாளுமன்றத் தொடரின் பொது வயநாடு அப்டின்னு போட்ட பய்யை மாட்டிகிட்டு வருவாங்க. போதுமா? போய் அடுத்த வாட்டியும் ஓட்டு போடு. வெளங்கிடும் 0
0
A viswanathan - ,
17 மே,2026 - 14:11Report Abuse
ஆள் போவது இத்தாலிய காங்கிரஸ் அல்ல.மதவாத கட்சி தான் ஆட்சி செய்யும். 0
0
Reply
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement