முத்து மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

கோவை: பி.கே.புதுார் முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது.

பாலக்காடு ரோடு, பி.கே.புதுாரில் அமைந்துள்ளது, முத்து மாரியம்மன் கோவில். கோவிலில் வரும் 27ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான விழா, நேற்று முன்தினம் விநாயகர் வேள்வியுடன் துவங்கியது.

நாளை காலை 6 மணிக்கு கம்பம் வெட்ட புறப்படுதலும், இரவு 7 மணிக்கு, நந்தா தீபம் ஏற்றுதல், சக்தி கரகம் கொண்டுவருதலும், நள்ளிரவு 12 மணிக்கு கம்பம் நடுதலும் நடக்கின்றன.

வரும் 20 முதல் 25ம் தேதி வரை தினமும் இரவு, 7 மணிக்கு பூவோடு எடுத்து விளையாடப்படுகிறது.

26ம் தேதி அம்மன் அழைத்தலும், 27ம் தேதி காலை 6 மணிக்கு, கரகம் புறப்படுதலும் நடக்கின்றன. கரகம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

28ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதியுலாவும், 29ம் தேதி மதியம், 12 மணிக்கு மறுபூஜை, அன்னதானமும் நடக்கிறது.

Advertisement