கஞ்சா வைத்திருந்த  17 வயது சிறுவன் கைது 

பெண்ணாடம், மே 18–

பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.

அப்போது, கடைவீதி சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்ற, 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, சிறுவனிடம், 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணையில், அந்த கஞ்சா சென்னையில் இருந்து நண்பர் வாங்கி வந்து கொடுத்ததாக சிறுவன் தெரிவித்தான்.

பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறுவனை கைது செய்து, கடலுாரில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். 

Advertisement