முறையாக இயக்கப்படாத பஸ்கள்: நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்

குன்னுார்: குன்னுார் டவுன் பஸ்களை மாற்று வழித்தடத்தில் இயக்குவதால் உள்ளூர் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசன் நிலவிவரும் நிலையில் உள்ளூர் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் சுற்று பஸ்களாகவும், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. நேற்று பந்துமை டவுன் பஸ் சமவெளி பகுதிக்கு மாற்று பஸ்சாக அனுப்பப்பட்டது. குன்னுார் மவுன்ட் பிளசன்ட் வழியாக இயக்கப்படும் டவுன் பஸ் பந்துமை பகுதிக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேரம் பஸ்சுக்காக அதிருப்தி அடைந்த பயணிகள் 'டைம் கீப்பர்' அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் தீர்வு கிடைக்கவில்லை.

பயணிகள் கூறுகையில், ' உள்ளூர் டவுன் பஸ்களை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement