கெடாரில் திருவாசக முற்றோதல்

கண்டாச்சிபுரம்: கெடார் பெரியநாயகி சமேத அழகிய நாதஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நடந்தது.

கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை முன்னாள் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் தேவி, கல்வியாளர் சுந்தரவடிவேல், விருத்தாம்பிகை கல்வி நிறுவன தாளாளர் அனிதா, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பழனிவேலு கல்வி நிறுவன தாளாளர் ராஜேந்திரன் மற்றும் கெடார் சிவனடியார்கள் சார்பில் விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் முற்றோதல் குழுவினர் தேவார திருவாசக பாடல்களை பாடினர். இதில் அடியார்கள் பார்த்திபன், முருகவேல், சாந்தவேல், ரவி, கணபதி, ராமன் உள்ளிட்ட அடியார்கள் கலந்து கொண்டனர். பின்னர் அழகிய நாதஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement