பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
புதுடில்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கடந்த மே 20ம் தேதி அரசு முறைப்பயணமாக மும்பை வந்த இவர், 23ம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியை சைப்ரஸ் அதிபர் நிகோஸ் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் அவர் பங்கேற்கிறார்.
மேலும், ஜனாதிபதி திரௌபதி முர்மு, அதிபர் கிறிஸ்டோடோலிடிஸை ராஷ்டிரிய பவனில் வரவேற்று அதிகாரப்பூர்வ இரவு விருந்தளிக்க உள்ளார். அதன்பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இருக்கிறார்.
மேலும்
-
ஓராண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்ட கழிப்பறை
-
விளையாட்டு செய்தி// மாநில கேரம் சாம்பியன்ஷிப் துவக்கம்
-
காஞ்சி அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ – மாணவியருக்கு அழைப்பு
-
மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர், கிளீனர் தப்பியோட்டம்
-
மாவட்ட விளையாட்டு மைதானம் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்வு
-
125 பள்ளி வாகனங்கள் சோதனை 15 வாகனங்களுக்கு அனுமதி ரத்து