மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
நமது நிருபர்
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி தாக்குதல் நடத்திய ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் சுகன்யா, 33. இவர், 10 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள கடையில் பணிபுரிந்தார். அப்போது, அதே வணிக வளாகத்தில் மற்றொரு கடையில் பணிபுரிந்த சூளைமேடைச் சேர்ந்த சையது இப்ராஹிம், 33, என்பவருடன் சுகன்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.
அப்போது சையது இப்ராஹிம், நம் திருமணம் நடக்க வேண்டும் என்றால், ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாற வேண்டும் என, வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டு காதலுக்காக, சுகன்யா மதம் மாறி, சபா மரியம் என பெயர் மாற்றிக் கொண்டார். இதனால், சுகன்யாவின் பெற்றோர் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில், சையது இப்ராஹிம் சுகன்யாவிடம் பழகுவதை தவிர்த்து, ஏமாற்றி வந்துள்ளார். இதையறிந்த சுகன்யா, கடந்த 6ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சுகன்யா புகார் அளித்தார். சையது இப்ராஹிமுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இதையறிந்த சுகன்யா, நண்பர்களுடன் அங்கு சென்று, தனக்கு நீதி வேண்டும், சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கல்யாண நிகழ்ச்சியின் வரவேற்பு மேடையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சுகன்யாவிற்கு ஆதரவாக வந்த தோழியை, இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தகாத வார்த்தையால் திட்டவே, அப்பெண் 'உன், காக்கி சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்' எனக் கூறினார்.
மேலும், தட்டிக்கேட்ட ஒருவருக்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி குத்துவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது அத்துமீறும் போலீசுக்கு சரியான தண்டனை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் மற்றுமல்ல இந்தியாவிலே எங்கும் லவ் ஜிஹாத் இல்லை என கூறும் நம் நடுநிலை வாதிகளுக்கு இப்போது தெரியும் என நினைக்கிறேன்.மிக முக்கியமான இந்த மதமாற்றம் பற்றி பேசாமல் போலீஸ் பற்றி பேசி இதன் தீவிரத்தை மடை மாற்றம் செய்கிறீர்கள்.
அவனை வேலையை விட்டே துரத்தவேண்டாமா? சட்டத்தை, மக்களை நல்லா காப்பாத்துறான் இந்த போலீஸுன்னு சொல்லி நாளை இவனுக்கு விருது குடுத்தாலும் குடுக்கலாம்.
இவனை குறைந்த பட்சம் 3 மாதம் சம்பளத்தை பிடித்து, வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்து இருக்க வேண்டும்.
ஏமாற்றி மதம் மாற்றி அந்த பெண்ணை கெடுத்த அந்த மர்ம நபருக்கு என்ன தண்டனை? சிறுபான்மை என்பதால் 1 திருமணம் + 3 திருமண லைசென்ஸ் = 4 திருமணம் வரை அவன் செய்யலாம் என்பதால் அரசு அவனுக்கு ஊக்கத்தொகை வழங்குமா? என்னய்யா சட்டம்?
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்??? இதனால் என்ன நடக்கும்??? ஒரு மண்ணும் ஆகாது. தவறு செய்தால் தண்டனை இப்படி இருந்தால் தவறுகள் எப்படி தொடரும்??? போலீஸ் என்ற ஒரு பதவி மக்களுக்கு சட்டப்பிரகாரம் துணையாக இருந்து நன்மை செய்வது தான். இப்படி ஒரு போலீஸ் நடந்துகொண்டால் அவரை வேலையை விட்டு தூக்குவது ஒன்று தான் சரியான தீர்ப்பு, கொஞ்ச நாள் காத்திருப்போர் பட்டியல் பிறகு வேறு ஒரு இடத்திற்கு மாற்றல் இது தானே நடக்கும். தவறு செய்தவன் எப்படி திருந்துவான். அவன் மாறவே மாட்டான்
காத்திருப்போர் பட்டியலுக்கு எதற்கு மாற்ற வேண்டும்? அவனை பனி நீக்கமல்லவா செய்யவேண்டும்? என்ன எழவு சட்டமோ?
மதம் மாறிய பெண் புத்தி வந்துபின் தாய் மதம் வந்தாளா? மதம் மாறியதற்கு என்ன தண்டனை? இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இவளுக்கு .
சம்பளத்துடன் காத்திருப்போர் பட்டியலில் வைப்பது வெகுமதி கொடுப்பது போல்.
பொதுமக்களை காக்க வேண்டிய இவரின் முகத்தில் எவ்வளவு வெறி தெரிகிறது.
ஹலோ பிரச்சினை இந்த போலீஸ் இல்ல. மதம் மாற்றி ஏமாற்றிய அந்த நாதாரியும் முட்டாள்தனமா மதம் மாறிய இந்த ஏமாளியும் தான். மதம் மாற்றியவன பத்தி பேசுங்க சார்.மேலும்
-
மாடு மேய்த்த போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
-
பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
-
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை சிறப்பு முகாம் நிறைவு
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை முனையமாக உருவாக்க கோரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுார் கோட்டத்தில் வரும் 26ல் குறைதீர் கூட்டம்
-
மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் கோவில் குளம்