பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர், மே 18–
‘பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூனில் நடக்கும் துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்,’ என, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த, 8ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 166 பேர் தேர்வெழுதியதில், 25 ஆயிரத்து, 388 பேர் தேர்ச்சி பெற்றனர். 778 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்காக, பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன், 29 முதல் ஜூலை 7ம் தேதி வரை நடத்தப்படுகிறது. துணைத்தேர்வுக்கு இன்று முதல் வரும், ஜூன், 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தங்கள் தேர்வு எழுதிய மையங்களில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் விபரம் அறியலாம் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement