அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பலி

காங்கேயம்:காங்கேயம், வீரணம்பாளையம் ஊராட்சி, படியாண்டி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 84; நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி அளவில் நத்தக்காட்டுவலசு பகுதிக்கு சென்றார். அப்போது கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கியது.


குடும்பத்தினர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்த
பிறகு, துரைசாமியை மீட்டு காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement