சிக்கன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது

பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே ஏ.செட்டிப்பள்ளி கிரா-மத்தை சேர்ந்தவர் பாபு, 48. சிக்கன் கடை நடத்தி வருகிறார்;

கடந்த, 16ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அப்போது, அப்பகுதியில் போதையில் இருந்த ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்த திம்மராஜ், 23, என்பவர், தாமாக முன்வந்து பாபுவிடம் தகராறு செய்து வாக்கு-வாதம் செய்தார். மேலும், பாபுவை பீர்பாட்டிலால் தலையில் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், பேரிகை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, திம்ம-ராஜை கைது செய்தனர்.

Advertisement