உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட் டம் சிறுவலுார் அருகே பதிப்பாளையம் உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி, கிலோ 165 ரூபாய், பனங்கருப்பட்டி, 450 கிலோ வரத்தாகி, கிலோ, 205 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பழைய விலைக்கு விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டி ரகங்களும், 1.08 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1.55 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 39.49 - 42.89 ரூபாய்ம், பச்சை காய், 34.64 - 37.91 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 43.39 ரூபாய் என, 59,444 கிலோ தேங்காய், 24 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.


* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 5.940 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 38 முதல் 41 ரூபாய்; 99 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 127 முதல் 136 ரூபாய்; 18 மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 104 முதல், 134 ரூபாய்க்கு விற்றது.


* அந்தியூர் வாரசந்தை வளாகத்தில் நேற்று வெற்றிலை சந்தை கூடியது. 50 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 40 ரூபாய், பெரிய கட்டு, 50 முதல் 60, பீடா வெற்றிலை கட்டு, 20 முதல் 25, செங்காம்பு வெற்றிலை கட்டு, 5 முதல் 15 ரூபாய் என, 3.50 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்றது.

* திருப்பூர் மாவட் டம் காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,334 கிலோ எடை தேங்காய் பருப்பு மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 138.25 ரூபாய், குறைந்தபட்சம், 122.10 ரூபாய் என, 1.82 லட்சம் ரூபாய்க்கு விற்றது

Advertisement