மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்:பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 55. அப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் பின்புறம் மது விற்றார். இவரிடமிருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* தாயில்பட்டியை டி.கோட்டையூரை சேர்ந்தவர் முத்துராஜ் 46.அரசு அனுமதி இன்றி கண்மாய் கரையில் வைத்து மது பாட்டில் விற்றார். அவரிடமிருந்து 180 மி.வி., அளவு கொண்ட 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.
சரவெடி தயாரித்த ஆலைஉரிமையாளர் மீது வழக்கு
சாத்துார்:சாத்துார் தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் சங்கரநத்தம் கிராமத்தில் உள்ள கோவிந்தராஜ் 61, என்பவருக்கு சொந்தமான வினோத் குமார் பயர் ஒர்க்ஸ் ஆய்வு செய்தபோது அங்கு அரசு அனுமதி இன்றி சரவெடி தயாரித்தது தெரிந்தது. வி.ஏ.ஓ. பாண்டியராஜ் போலீசில் புகார் செய்தார். பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிந்து சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு விதிமீறல் : ஆலை உரிமையாளர் மீது வழக்கு
சாத்துார்:சிவகாசியை சேர்ந்தவர் சுடலைமணி, இவருக்கு சொந்தமான குண்டாயிருப்பு கிராமத்தில் செண்பக விநாயகா பயர் ஒர்க்ஸ் உள்ளது.நேற்று முன் தினம் மாவட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் டோரா அருள் செல்வி தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு செய்த போது அங்கு தகர செட்டில் பேச்சிரக வெடி தயாரிப்பதற்காக 60 சாட் , 120 சாட், மைக்ரோசார்ட் பொருத்தப்பட்ட காகித அட்டைக் குழாய்கள் அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பட்டாசு ஆலை விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிய வந்தது. வி.ஏ.ஓ. ராமசாமி பாண்டியன் போலீசில் புகார் செய்தார் ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிந்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி