ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
நமது நிருபர்
சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கிறது. அவையில் பெரும்பான்மை இருப்பதால், அந்த பதவியை தவெக எளிதில் கைப்பற்றும் நிலை உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 8ம் தேதி
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: ஜூன் 11ம் தேதி
தேர்தல்: ஜூன் 18ம் தேதி; அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழக சட்டசபையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தவெக அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்த எம்.பி., பதவியிடத்தை எளிதில் கைப்பற்றும் நிலை உள்ளது.
@block_P@
நாட்டின் 10 மாநிலங்களில் 24 எம்பிக்களின் பதவிக்காலமும் இதே காலத்தில் முடிவடைகிறது. இந்த பதவிக்கான தேர்தலும் ஜூன் 18ம் தேதி நடக்கிறது. ஆந்திராவில் 4 இடங்களும், குஜராத்தில் 4 இடங்களும், கர்நாடகாவில் 4இடங்களும், ராஜஸ்தானில் 3 இடங்களும், ஜார்க்கண்டில் இரண்டு இடங்களும், மத்திய பிரதேசத்தில் 3 இடங்களும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலம், மிசோரத்தில் தலா 1 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.block_P
தினமலர் சிறப்பு வீடியோ!
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பி ரேஸில் தவெக; வெளியான அதிரடி அப்டேட்: ஆட்சி அமைத்ததும் அடித்த ஜாக்பாட் குறித்து வீடியோ தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட் இணையத்தில் வீடியோ ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எடப்பாடி பழனிச்சாமி செய்த எவ்வளவோ அயோக்கியத்தனங்களின் இதுவும் ஒன்று.
சண்முகத்தால் நாட்டுக்கும் கேடு கட்சிக்கும் கேடு, அநியாயமாக ஒரு சீட்டை அதிமுக தொண்டர்கள் இழக்கிறார்கள்......அது தவெக வுக்கு அதிர்க்ஷ்டாமாக போகிறது....
சி.வி.சண்முகத்தின் தமிழக அமைச்சர் பதவி வெறியால் மேலும் ஒரு ராஜ்யசபா உறுப்பினரை இழக்கிறது அ.தி.மு.க. அன்று கட்சியில் எத்தனையோ பேர் சீட் கேட்க அவ்வளவு பேரையும் புறந்தள்ளி சி.வி. சண்முகத்தை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கியதுதான் எடப்பாடி செய்த மாபெரும் தவறு.
விட்டுக்கொடுத்தல் என்ன தப்புமேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி