அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு

1

சென்னை: மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமைச்சர் ஆனந்த், தங்கள் கட்சியினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது; தவெக நிர்வாகிகள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது. கட்சியினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள சூழலில், நமக்கான பொறுப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது, எனக் கூறியுள்ளார்.

Advertisement