முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு

28

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 22) மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. விசிக எம்எல்ஏ வன்னியரசு, முஸ்லிம் லிக் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.


தமிழகத்தில், 72 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட, 23 அமைச்சர்கள் நேற்று புதிதாக பதவியேற்றனர்.

முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் இன்று அமைச்சராக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன்.

இறைவன் மீது...



முஸ்லிம் லீக் எம்எல்ஏ., ஷாஜஹான் இறைவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி கூறி அமைச்சராக பதவியேற்றார். சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

உளமாற….




விசிக எம்எல்ஏ வன்னி அரசு உளமாற உறுதி கூறி அமைச்சராக பதவியேற்றார். இவருக்கு சமூக நீதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் நேரலை



விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement