2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மே 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 20) ஆபரண தங்கம், கிராம் 14,750 ரூபாய்க்கும், சவரன், 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 285 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 14,810 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 1,18,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 290 ரூபாய்க்கு விற்பனையானது.

கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 480 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்தன.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (மே 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 295 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement