பிளஸ் 2 தேர்வில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சாதனை
கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளது.
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்கள் ஞானவேல் குமரன் 500க்கு 484 மதிப்பெண், சாய்கணேஷ் 478 மதிப்பெண், சித்தார்த் பண்டாரி 477 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தனர். 450க்கு மேல் 13 மாணவர்களும், 400க்கு மேல் 53 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர்.
ஆங்கிலம் பாடத்தில் ஒரு மாணவி, வேதியியலில் ஒரு மாணவர், வணிகவியல் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
தேர்வில் சாதித்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி, சேர்மன் சிவக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி , மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர் மீனாட்சி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி