'குடி'மகன்கள் அட்டகாசம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, காவிரி சுற்றுவட்டார பகுதியான வ.ஊ.சி., நகர் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் குமாரபாளையம் எம்.எல்.ஏ., விஜயலட்சுமி, பொது மக்கள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், பொது மக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றார்.


மேலும் அப்பகுதிக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ.,விடம், இப்பகுதியில் இரவு நேரத்தில், 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. 'குடி'மகன்களால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இரவில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர். அதற்கு எம்.எல்.ஏ., விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

Advertisement