ரேஷன் கடை பணியாளர் சங்க விழுப்புரம் கிளை செயற்குழு கூட்டம்

விழுப்புரம்: ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஜெயசந்திரராஜா சிறப்புரையாற்றினார். இதில், விழுப்புரம் மாவட்ட பொதுவிநியோக திட்ட துணைப் பதிவாளர் ரேஷன் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களை தரக்குறைவாக பேசுதல், கடையில் இருப்பு சரியாக இருந்தாலும் அபராதம் விதிப்பதை கண்டித்தல், இது தொடர்பாக சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உள்ளிட்டோரிடம் மனு கொடுப்பது எனவும், வரும் ஜூன் 3ம் தேதி பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, மாவட்ட பொருளாளர் ரஷீத், துணை தலைவர்கள் பழனிவேல், பிரபாகரன், ஜெகதீஸ்வரன், விஜய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement