பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

விழுப்புரம்: நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த சாணிமேட்டை சேர்ந்தவர் சரவணன் மனைவி தமிழ்செல்வி, 33; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரமேஷ், 31; என்பவருக்கும் பொதுவான 6 ஏக்கர் நிலத்தை தலா 3 ஏக்கர் வீதம் வாய் மொழியாக பிரித்து அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி மறுபடியும் நிலத்தை முறையாக பிரித்து தரக்கூறி தமிழ்செல்வியை, ரமேஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். காணை போலீசார், ரமேஷ், விஜயகுமார் மீது வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement