சாத்துார், விருதுநகரில் மாலை நேர மழை
சாத்துார்: சாத்துார், விருதுநகரில் நேற்று அதிகாலை முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது மே 17 மாலை 4:00 மணிக்கு திடீரென சாரலுடன் மழை பெய்யத் துவங்கியது.
தொடர்ச்சியாக அரை மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மெயின் ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் நிரம்பி மழை நீர் முழுவதும் மக்கள் நடக்கும் நடைபாதையில் தேங்கியது. இதில் கழிவு நீரும் கலந்திருந்ததால் துர்நாற்றம் வீசியது. சாத்துார் , படந்தால், சத்திரப்பட்டி சடையம்பட்டி, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்ததால் கோடை வெயிலால் வாடி வதங்கிய மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகரிலும் மதியத்திற்கு பின் கருமேக கூட்டங்கள் உருவாகி மாலை 4:00 மணிக்கு சிறிது நேரம் மழை கொட்டியது. அதன் பின் அவ்வப்போது சாரல் மழை பெய்ததது. இதனால் பகல் நேர வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு மாறியது.
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
-
கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு
-
தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
-
ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
-
கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்