ஊராட்சி செயலர்களுக்கு பி.டி.ஓ., மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தல்
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைமை துணை ஒருங்கிணைப்பாளர் கோவை ரங்கராஜ் தலைமையில் அரசுச் செயலரிடம் மனு கொடுத்தனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், குமரேசன், வாசுதேவன், மணிராஜ், சாஜூ, இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், ராஜ்குமார், முருகன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்களுக்கு ஊதியத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும். நீண்டநாள் கோரிக்கையான தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் ஊதியத்தில் 50 சதவீதத்தையும், பணிக்கொடை, ஓய்வூதியத்தை பி.டி.ஓ., மூலம் வழங்க வேண்டும்.
குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துாய்மைப் பணியாளருக்கு காலமுறை ஊதியம் வேண்டும். ஊராட்சி கணினி இயக்குனர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தாமதமின்றி கருணை பணிநியமனம் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உதவிபொறியாளர், ஒன்றிய பொறியாளருக்கு சம ஊதியம், ஒன்றிய பணிமேற்பார்வையாளருக்கும், உதவி பொறியாளருக்கும் பதவி உயர்வு, வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்