சுவரொட்டிகளை அகற்ற நகராட்சி தயக்கம்
தேனி:தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி வருகின்றன. ஆனால், தேனி நகராட்சிக்குட்பட்ட தேனி பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட்கள், அல்லிநகரத்தில் உள்ள பஸ் ஸ்டாப்கள், மூடிய கடைகள், சென்டர் மீடியன்களில் நகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனை அகற்ற நகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பஸ் ஸ்டாண்டுகளில் பொது அழகை சீர் குலைக்கும் வகையில் ஒட்டி உள்ள சுவரொட்டிகளை அச்சடித்த நிறுவனங்கள், அதனை ஒட்டியர்கள், யார் சார்பில் அச்சிடப்பட்டுள்ளதோ அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement