மரவள்ளி தோட்டங்களில் பூச்சிதாக்கு: தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
விருத்தாசலம்: நல்லுார் வட்டார மரவள்ளி தோட்டங்களில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை, தோட்டக்கலை விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நல்லுார் வட்டாரத்தில் மரவள்ளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பெய்து வரும் கோடை மழை காரணமாக மரவள்ளி பயிர்களில் செம்பேன், இலைப்பேன் உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் அதிகரித்து, இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதையடுத்து, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை விஞ்ஞானி சிவசங்கரன் தலைமையில் நல்லுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலெக்ஸ், உதவி அலுவலர் விக்னேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதில், வரம்பனுார் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி தோட்டத்தில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பயிரில் காற்றோட்டம் அதிகரிக்க இரண்டு கிளைகள் மட்டும் பராமரிக்க வேண்டும்.
பூச்சிமருந்து இலைகளின் அடிப்பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும். செம்பேன் பாதிப்பு குறைய சைப்புளுமெட்டாபெண் அல்லது டைக்கோபால் மருந்தை லிட்டருக்கு 0.5 மில்லி வீதம் அடிக்க வேண்டும். இலையின் மஞ்சள் நிறத்தன்மை விரைந்து மாற சொட்டுநீர் வழி 19:19:19 உரத்தை பாசன நீரில் சேர்த்து அளிக்க வேண்டும்.
மேலும், இலை வழி மருந்து தெளிக்கும் போது நுண்ணுாட்ட உரம் மற்றும் ஹூமிக் அமிலம் ஆகியவற்றை சேர்த்து தெளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு